ஆப்நகரம்

இணையத்தில் மீண்டும் வைரலாகும் 'மோடி சேலை'

பிரதமர் மோடியின் உருவம் பிரிண்ட் செய்யப்பட்ட சேலையின் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNN 3 Dec 2016, 9:20 pm
பிரதமர் மோடியின் உருவம் பிரிண்ட் செய்யப்பட்ட சேலையின் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil modi saree vairal in social media
இணையத்தில் மீண்டும் வைரலாகும் 'மோடி சேலை'


பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட மோடி சேலையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நரேந்தர் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே அவரது உருவம் பதித்த சேலையை மும்பைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனை பாஜக பெண் தொண்டர்கள் விரும்பி வாங்கி கட்டிக்கொண்டனர்.

இதன்பிறகு 2015-ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்ற தேர்தலில் மோடியை முன்னிலைப்படுத்த அந்த மாநிலத்தொண்டர்கள் இந்த சேலைகளை கட்டிக்கொண்டு வலம்வந்தனர். அப்போதே இந்த சேலை மிகவும் பிரபலமானது.

இதனைடையே மோடி சேலை குறித்த புகைப்பட வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதனை புதிகாக பார்க்கும் சிலர் இப்போது தான் இந்த சேலை அறிமுகப்படுத்தப்பட்டது போன்று இதனை வைரலாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி