ஆப்நகரம்

பட்டதாரி முஸ்லிம் பெண்களுக்கு 'பல்க்' பண உதவி

பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51 ஆயிரம் நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 8 Aug 2017, 2:26 pm
டெல்லி: பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51 ஆயிரம் நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil modi sarkars rs 51k wedding bounty for graduate muslim women
பட்டதாரி முஸ்லிம் பெண்களுக்கு 'பல்க்' பண உதவி


பள்ளிக்கூடத்திற்குப் பிறகு படிப்பை தொடர்வதில் பின்தங்கியுள்ள முஸ்லிம் பெண்கள், கல்லூரிக்குச் செல்வதை அதிகப்படுத்ததும் நோக்கில் பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51 ஆயிரம் நிதி உதவி அளித்து ஊக்குவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் மாணவியர் ஒன்பது மற்றும் 10ஆம் வகுப்பை பூர்த்தி செய்தால் ரூ.10 ஆயிரம், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பூர்த்தி செய்தால் ரூ.12 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு ரூ.51 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் என்ற இக்கூட்டத்தில் முடிவாகியுள்ளது.

இதற்காக தனி இணையதளம் ஒன்றை உருவாக்கும் பணி நடக்கிறது என்றும் பிரதமரின் ஒப்பதலுக்குப் பிறகு விரைவில் இத்திட்டம் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி