ஆப்நகரம்

இரவில் பயணம்; விமானத்தில் தூக்கம்: மோடி சுவாரஸ்யம்

விமானத்தில் தூங்கியும், இரவு நேரங்களில் விமானத்தில் பயணம் செய்தும் பிரதமர் மோடி நேரத்தை மிச்சப்படுத்தி வருகிறார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

TOI Contributor 9 Apr 2016, 2:40 pm
புதுதில்லி: விமானத்தில் தூங்கியும், இரவு நேரங்களில் விமானத்தில் பயணம் செய்தும் பிரதமர் மோடி நேரத்தை மிச்சப்படுத்தி வருகிறார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil modi travels by night sleeps on flights to save time
இரவில் பயணம்; விமானத்தில் தூக்கம்: மோடி சுவாரஸ்யம்


பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் செல்லும் போது, அந்நாட்டு ஓட்டல்களில் தங்குவதை பெரும்பாலும் தவிர்ப்பார் என்றும், பயணத்தின் போது விமானத்தில் தான் தூங்குவார் என்றும் சில மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு எடுத்துக்காட்டாக அவரது அண்மைய பயணத்தை குறிப்பிட்ட அதிகாரிகள், பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தின் போது, 3 நாட்கள் இரவு ஏர்இந்தியா விமானத்தில் தான் தூங்கி உள்ளார். 2 நாட்கள் மட்டுமே வெளிநாட்டு ஓட்டல்களில் தங்கி உள்ளார். அவர் இவ்வாறு செய்யாவிட்டால் இந்த பயணத்தை மூன்று நாட்களில் முடித்திருக்க முடியாது. சுமார் ஆறு நாட்களாவது ஆகியிருக்கும் என்றனர்.

பெல்ஜியம் நாட்டில் கடந்த 31-ம் தேதியன்று வேலை தினம் என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பணியை புறக்கணித்து விட்டு வருவதை விரும்பாத மோடி, 30-ம் தேதி இரவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையை நிகழ்த்திவிட்டு அன்றைய தினம் இரவே அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அன்றைய தினம் இரவும் அவர் விமானத்தில் தான் கழித்தார்.

அமெரிக்காவில் ஓர் இரவும், சவுதி ரியாத்தில் ஓர் இரவும் மட்டுமே அவர் ஹோட்டல்களில் தங்கியுள்ளார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் தனது முதல் மற்றும் இரண்டாம் ஆட்சி காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில், முறையே 15 வெளிநாட்டு பயணங்களில் 18 நாடுகளுக்கும், 17 பயணங்களில் 24 நாடுகளுக்கும் சென்றுள்ளார். மேலும், 72 நாட்கள் வெளிநாடுகளில் கழித்துள்ளார்.

ஆனால், 95 நாட்கள் வெளிநாடுகளில் கழித்துள்ள மோடி, இரண்டு ஆண்டுகளில் 20 பயணங்கள் மூலம் 40 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

அடுத்த செய்தி