ஆப்நகரம்

மத்திய அரசின் ஃபேர் அண்ட் லவ்லி திட்டம்- ராகுல் காந்தி விமர்சனம்

'வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, ஃபேர் அண்ட் லவ்லி திட்டம் ஒன்றை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்,' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

TOI Contributor 2 Mar 2016, 6:21 pm
'வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, ஃபேர் அண்ட் லவ்லி திட்டம் ஒன்றை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்,' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil modijis fair and lovely yojna to convert black money says rahul gandhi
மத்திய அரசின் ஃபேர் அண்ட் லவ்லி திட்டம்- ராகுல் காந்தி விமர்சனம்

இதுதொடர்பாக, மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஃபேர் அண்ட் லவ்லி யோஜனா ஒன்றை செயல்படுத்தி வருவதாகக் கிண்டல் செய்தார். கறுப்புப் பண விவகாரத்தில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல், வார்த்தை ஜாலம் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்ட அம்சங்களையே, தற்போதைய பட்ஜெட்டில் சேர்த்துள்ளனர். இதைப் பார்க்கும்போது, அருண் ஜேட்லிக்குப் பதிலாக, ப.சிதம்பரம்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்தாரோ எனச் சந்தேகம் எழுவதாக, ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி