ஆப்நகரம்

ஆர்ஜேடி எம்.பி முகமது தஸ்லிமுதீன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்!!

சுவாசக் கோளாறு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. முகமது தஸ்லிமுதீன் இன்று காலமானார். அவரது வயது 74.

TNN 17 Sep 2017, 4:30 pm
சென்னை: சுவாசக் கோளாறு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. முகமது தஸ்லிமுதீன் இன்று காலமானார். அவரது வயது 74.
Samayam Tamil mohammed taslimuddin died in chennai apollo hospital
ஆர்ஜேடி எம்.பி முகமது தஸ்லிமுதீன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்!!


லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீகார் மாநிலத்தின் ஆராரியா தொகுதியின் லோக்சபா உறுப்பினராக இருந்தார்.

சென்னையில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற லோக்சபா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது, இதையடுத்து, அவர் சென்னை அப்பலோவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஸ்லிமுதீன் 7 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohammed Taslimuddin died in Chennai Apollo hospital due to breathing problem.

அடுத்த செய்தி