ஆப்நகரம்

18 ஆயிரம் கோடியில் 3 லட்சம் வீடுகள்: மத்திய அரசு அறிவிப்பு

14 மாநிலங்களில் ரூ18,023 கோடி செலவில் 3,21,567 வீடுகள் கட்டப்படப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 6:30 pm
டெல்லி: 14 மாநிலங்களில் ரூ18,023 கோடி செலவில் 3,21,567 வீடுகள் கட்டப்படப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Real-Estate-Affordable-housing


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 மாநிலங்களின் உள்ள 523 நகரங்களில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன. என்று கூறப்பட்டுள்ளது.

ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மிசோரம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், கேரளா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் இதன் மூலம் பலனடையும்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இந்த வீடுகளுக்காக மத்திய அரசு ரூ4,752 கோடியை வழங்குகிறது.

அடுத்த செய்தி