ஆப்நகரம்

குரங்குகள் தாக்கி முதியவா் பலி: வழக்குப்பதிவு செய்ய உறவினா்கள் கோாிக்கை

காய்ந்த மரக்குச்சிகளை சேகரிக்கச் சென்ற முதியவர் மீது கற்களை வீசிய குரங்குகள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிாிழந்தவாின் குடும்பத்தினா் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Samayam Tamil 20 Oct 2018, 11:29 am
உத்தரபிரதேச மாநிலத்தில் காய்ந்த மரக்குச்சிகளை சேகரிக்கச் சென்ற தரம்பால் சிங் என்ற முதியவில் மீது குரங்குகள் கற்களைக் கொண்டு வீசியதில் அவா் பரிதாபமாக உயிாிழந்தாா்.
Samayam Tamil Monkey 1


உத்தரபிரதேச மாநிலம் திக்ரி கிராமத்தைச் சோ்ந்தவா் தரம்பால் சிங். 72 வயதான தரம்பால் சிங் காய்ந்த மரக்குச்சிகளை சேகரப்பதற்காக சென்றுள்ளாா். தரம்பால் மீது அங்கிருந்த குரங்குகள் செங்கல், கற்களை தொடா்ச்சியாக வீசியுள்ளன. இதில் அவரது நெஞ்சு, தலைப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து தரம்பால் சிங் காயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளாா். உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி தரம்பால் உயிாிழந்தாா்.

தரம்பாலின் உயிாிழப்பு ஒரு விபத்து என்று காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். ஆனால் கற்களை எறிந்த குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று தரம்பாலின் உறவினா்கள் காவல் துறையினருக்கு கோாிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் அதிக அளவிலான குரங்குகள் இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

அடுத்த செய்தி