ஆப்நகரம்

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று துவங்க வாய்ப்பு..!

கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இன்று முதல் தென் மேற்கு பருவ மழை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 30 May 2017, 10:16 am
கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இன்று முதல் தென் மேற்கு பருவ மழை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil monsoon most likely to arrive over kerala ne today imd
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று துவங்க வாய்ப்பு..!


பொதுவாக கேரளாவில் (ஜுன் 1) தென் மேற்கு பருவ மழை துவங்கிய சில நாட்களுக்கு பின்னரே, வட கிழக்கு மாநிலங்களில் பருவ மழை துவங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை வங்கக்கடலில் உருவாகியுள்ள மோரா புயல் காரணமாக, கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஒரே நாளில் தென் மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது ஒரு அரிய நிகழ்வாகும்.

வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வட கிழக்கு மாநிலங்களில், பலத்த மழை பெய்யும் என இந்திய வானியல் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கு வங்காளம், அந்தமான் பகுதி மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோரா புயல் காரணமாக நாளை கேரளாவிலும், பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களிலும் பருவ மழை பெய்யும் என இந்திய வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழையினால், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Monsoon most likely to arrive over Kerala, NE today: IMD

அடுத்த செய்தி