ஆப்நகரம்

வெள்ளி வரை வெளுத்து வாங்கும் மழை!

நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மே 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானியல் துறை எச்சரித்துள்ளது.

Samayam Tamil 7 May 2018, 6:33 pm
நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மே 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானியல் துறை எச்சரித்துள்ளது.
Samayam Tamil rajasthan-dust-storm-bikaner-pti_650x400_81525323036


இது தொடர்பாக இந்திய வானியல் துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மே 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழையும், புயல் மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் என்றும் உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சூறைக்காற்றும் இடியுடன் கூடிய மழையும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் (மேற்கு பகுதிகளில்) ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழையும் சூறைக்காற்றும் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் (மேற்குப் பகுதிகளில்) புழுதிப்புயலும் இடியுடன் கூடிய கனமழையும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி