ஆப்நகரம்

கங்கை ஆற்றில் 5 குழந்தைகளை வீசிய தாய்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உணவின்றி தனது 5 குழந்தைகளை கங்கை ஆற்றில் வீசி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2020, 3:03 pm
உத்தரப்பிரதேச மாநில பதோஹி மாவட்டத்தில் உணவு இல்லாமல் தனது ஐந்து குழந்தைகளையும் கங்கை ஆற்றில் தாய் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கங்கை ஆற்றில் 5 குழந்தைகள் வீச்சு


தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மூன்று பேரின் உடலை மீட்டது. மேலும், இருவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தாயை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

லாக் டவுன் இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணுக்கு பணம் இல்லாமல், உணவு இல்லாமல் இந்த முடிவை எடுத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த அந்தப் பெண்ணுக்கு பணி இல்லாததால் வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவை சென்றடைந்ததா இந்தியா அனுப்பிய மருந்து?

முதலில் குழந்தைகளை மீட்க வேண்டியதுதான் எங்களது கடமை. பின்னர்தான் விசாரணை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு... பிறந்த குழந்தையை பைக்கில் கொண்டு போய் காப்பாற்றிய மருத்துவர்

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''கணவருடன் அந்தப் பெண்ணுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதையடுத்தே குழந்தைகளை அந்தப் பெண் ஆற்றில் வீசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் அருகில் சென்றால் காட்டிக் கொடுக்கும் ஆப்!!

சில ஊடகங்கள் உணவு இல்லாமல் குழந்தைகளை வீசியதாகவும், சில ஊடகங்கள் கணவருடன் தகராறுஏற்பட்டதால் வீசியதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அடுத்த செய்தி