ஆப்நகரம்

நாளை அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!

அன்னை தெரசாவுக்கு நாளை புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

TNN 3 Sep 2016, 5:40 pm
அன்னை தெரசாவுக்கு நாளை புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil mother teresa to be declared saint tomorrow
நாளை அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!


வாட்டிகன் நகரில் அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் விழா நாளை நடக்கிறது. போப் ஃபிரான்சிஸ், இப்பட்டத்தை அவருக்கு வழங்கி சிறப்பு செய்கிறார். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இத்தாலி சென்றுள்ளார்.

மேலும், நாளைய தினம் (ஆகஸ்ட் 4), அன்னை தெரசாவின் 19வது நினைவு தினம் ஆகும். இந்த நாளில் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதன் மூலமாக, வாழ்நாள் முழுவதும் ஏழை, எளியவருக்குப் பாடுபட்ட, அவரது ஆன்மாவுக்கு சிறந்த மரியாதை செய்யப்பட்டதாக அமையும் என்று, வாட்டிகன் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நிகழ்வு, இந்தியா முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர் வாழ்ந்து மறைந்த கொல்கத்தா நகரிலும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடான மாசிடோனியாவில் கடந்த 1910ம் ஆண்டில் பிறந்த அன்னை தெரசா, தனது இளம்பருவத்திலேயே, இந்தியா வந்தடைந்தார். கொல்கத்தாவில் தங்கியபடி, ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்ய தொடங்கிய அவர், 1950ம் ஆண்டில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இதன்மூலமாக, தொழுநோயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான உதவிகள் செய்யப்பட்டன.

இந்தியா மட்டுமின்றி, உலக அளவில், 130க்கும் அதிகமான நாடுகளில் அன்னை தெரசாவின் தொண்டுநிறுவனம் செயல்படுகிறது. வாழும்போதே, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, 1997ம் ஆண்டு மறைந்தார். எனினும், பலருக்கு இன்னமும் அவர் உன்னத வழிகாட்டியாக உள்ளார். அதன் அடிப்படையிலேயே, அவருக்கு புனிதர் பட்டம் வழங்க, வாட்டிகனில் உள்ள கத்தோலிக்க தலைமையகம் முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி