ஆப்நகரம்

படங்கள் பார்த்ததுதான் தனது வெற்றிக்கு காரணம்: ஜேஇஇ டாப்பர் பிரணவ் கோயல்!

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் இந்தியளவில் முதலிடத்தை பிடித்த பிரணவ் கோயல், படிக்கும் வேளையில் படங்கள் பார்த்ததுதான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2018, 11:10 am
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் இந்தியளவில் முதலிடத்தை பிடித்த பிரணவ் கோயல், படிக்கும் வேளையில் படங்கள் பார்த்ததுதான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil cats
படங்கள் பார்த்ததுதான் தனது வெற்றிக்கு காரணம்: ஜேஇஇ டாப்பர் பிரணவ் கோயல்!


இந்தியா முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 20ஆம் தேதி நடைபெற்றது. முதல் முதலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்களுடன் இந்தியளவில் முதலிடம் பெற்று சாதனை பிடித்தார். பஞ்சகுலா பவன் வித்யாலாயா பள்ளியில் பயின்ற பிரணவ், தற்போது பாம்பே ஐ.ஐ.டி-யில் படிக்க முடிவு செய்துள்ளார்.

பிரணவின் இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹைதரபாத்தில் அவர் பயின்ற ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தனது பெற்றொர்களுடன் கலந்து கொண்ட பிரணவ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை தொடர முடிவு செய்துள்ளேன். அதிலுள்ள டெவலப்பிங் பிரோகிராம்ஸ் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. பி.டெக் படிப்பை முடித்த பிறகு, அனுபவத்திற்காக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்க திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு தொழில் முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

எப்பொழுதும் புத்தகம், தேர்வு என்று படித்துக் கொண்டிருக்காமல் பொழுது போக்கிற்காகவும் சிறிது நேரம் செலவிட்டதுதான் எனது வெற்றிக்கு காரணம் என்று கூறும் பிரணவ், ஒரு நாளில் ஐந்து முதல் ஆறுமணி நேரம் மட்டுமே படிப்பதற்காக செலவிட்டேன் என்று தெரிவித்தார்.

ஜேஇஇ மெயின் தேர்வில் அகில இந்தியளவில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ள பிரணவ், 12ஆம் வகுப்பில் 97.2% மதிப்பெண்களை வாங்கியுள்ளார்.

மேலும் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருப்பதால் ஏற்படும் மன அழுத்ததிலிருந்து விடுபட கார்ட்டூன்களை பார்ப்பேன் என்றும், ஹிந்தி மற்றும் ஆங்கில நாவல்களை படிப்பேன் என்றும் கூறும் பிரணவுக்கு, பஞ்சாபி இசைதான் எனக்கு மன அமைதியை தரும் மருந்து என்று கூறுகிறார்.

பிரணவ் குறித்து அவருடைய அம்மா மம்தா கோயல் கூறுகையில், எனது மகன் எப்பொழுதும் புத்தக புழுவாக இருக்காமல், அவனுக்காக நேரத்தை செலவிடுவான் புத்தகங்கள் படிப்பான், படங்கள் பார்ப்பான், குடும்பத்துடன் நேரம் செலவிடுவான் என்று பெருமையுடன் கூறினார்.

பிரணவின் வெற்றி குறித்து அவருடைய பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் கூறுகையில், அவர் திறமையான மாணவர், அவரால் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டோம். அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு தேவையான பயிற்சிகளை மாற்றியமைத்து வழங்கினோம். அவரது பெற்றொர்களிடமும் உங்கள் மகனை ஊக்கப்படுத்துங்கள் என்று அறிவுரை வழங்கினோம் என்று பயிற்சி மையத்தின் நிறுவனர் மிர்ணால் சிங் தெரிவித்தார்.

அடுத்த செய்தி