ஆப்நகரம்

ஆளுக்கு ரூ.4,000; விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் - கைகொடுக்கும் மாநில அரசு!

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2020, 6:51 am
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை மத்தியப்பிரதேச மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீரோ வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.800 கோடி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.4,000 பணம் செலுத்தப்படும் என்று மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Cash For MP Farmers


இது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி(PM-KISAN) திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுகான், விவசாயிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக RCB6(4), பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி, ஜீரோ சதவீத வட்டியில் கடன், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்:

இதில் முதல்கட்டமாக முதலமைச்சர் விவசாய நலத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம் பிரதமரின் சம்மன் நிதியின் கீழ் பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ரூ.4,000 பணம் வழங்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் இரண்டு தவணைகளில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

விவசாயிகளின் நலன் தான் என்னுடைய வாழ்வின் இலக்கு. வரும் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். உணவு தானியங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று தவணைகளில் வழங்கப்படும். இதில் அதிக வருமானம் பெறும் விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி