ஆப்நகரம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்: எம்.பி.இரவிக்குமார் கடிதம்

நிறுவனத்தை கப்பாற்றுங்கள் எறும் கோரிக்கை வைத்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 12 Aug 2020, 10:58 am
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும், தற்போது அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 4ஜி சேவை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் தயாராகி வருகிறது.
Samayam Tamil mp ravikumar letters ravi shankar prasad regarding bsnl 4g service establishment
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்: எம்.பி.இரவிக்குமார் கடிதம்


இந்நிலையில், இதியாவிற்கு சொந்தமான ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும், அந்நிறுவனத்தை கப்பாற்றுங்கள் எறும் கோரிக்கை வைத்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“#SaveBSNL என்ற தனியடைவுடன், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மத்திய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் அக்கடிதத்தையும் இணைத்து வெளியிட்டிருந்தார்.

கோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது? - அதிரவைக்கும் தகவல்கள்!

அதில், பிற வணிக நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனமும் வளர வேண்டும் என்றால், 4ஜி சேவையைத் தொடங்குவதுதான் முதல் வழி என்று தெரிவித்ததோடு 3 அம்சக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன..

அடுத்த செய்தி