ஆப்நகரம்

முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் தீ விபத்து

மும்மைபையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 10 Jul 2017, 11:15 pm
மும்பை : தெற்கு மும்பையில் அட்லாமவுன்ட் ரோடு பகுதியில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
Samayam Tamil mukesh ambanis house antilia catches fire
முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் தீ விபத்து


உலகிலேயே அதிக மதிப்புக்கொண்ட தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா மும்பையில் உள்ளது. இந்த பங்களா ஆன்டிலியா என அழைப்படுகிறது. உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ரெசிடென்சியல் பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது.

சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரம் கொண்டது.

3 ஹெலிகாப்டர் தளம், 168 கார் பார்க்கிங், ஸ்நோ ரூம் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பங்களாவில் திடீரென சிறிது நேரத்திற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் பறந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் உள்ள தோட்டம் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குதான் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது என்று தீயணைப்பு அதிகாரி பி. எஸ். ரஹாங்டேல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ரஷ்மி கரன்திகர் கூறுகையில், ''வீட்டின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்'' என்றார்.

ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''வீட்டின் தோட்டம் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது'' என்றார்.

Fire breaks out at Mukesh Ambani's Antilia's terrace; under control

அடுத்த செய்தி