ஆப்நகரம்

10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.

Samayam Tamil 23 Jan 2020, 4:02 pm
காவல்துறை, தீயணைப்பு துறை போன்றவற்றில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது செய்த வீர தீர செயல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் அதற்கு இணையாக சிறுவர், சிறுமிகளும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டு பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil 10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது


இந்த வீர குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பால சக்தி புரஸ்கார் என்ற விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான விருது 49 சிறுவர், சிறுமிகளுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

2018ஆம் ஆண்டு மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்தைக் கண்ட ஜென் சதாவர்டே என்ற 12 வயது சிறுமி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்புக்குள் சென்று 10 பேரைக் காப்பாற்றினார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அதிமுக ஆதரிக்க காரணம் இதுதானாம்!

அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான விருது டெல்லியில் நடந்த விழாவில் ஜென் சதாவர்டேவுக்கு வழங்கப்பட்டது.

தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ரஜினி, பெரியாரை மறக்கலாமா? - செல்லூர் ராஜு கேள்வி

அடுத்த செய்தி