ஆப்நகரம்

பள்ளி செல்லாத மாணவிக்கு எம்ஐடி.,யில் இடம்

மும்பை அருகே வாடாலா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மாளவிகா ஜோஷி(17), தனது 12வது வயதில் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டு, தற்போது எம்ஐடி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

TNN 31 Aug 2016, 11:47 am
மும்பை: மும்பை அருகே வாடாலா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மாளவிகா ஜோஷி(17), தனது 12வது வயதில் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டு, தற்போது எம்ஐடி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil mumbai girl opts out of school enters mit
பள்ளி செல்லாத மாணவிக்கு எம்ஐடி.,யில் இடம்


10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாளவிகா கணினி புரோகிராமில் திறமைசாலித்தனத்தால் எம்ஐடியில் இளங்கலை பட்டம் படிகக்வுள்ளார். மாளவிகா தனது அறிவுத் திறைமையால் 3 முறை சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

கணிதம், கணினி, இயற்பியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வெல்லும் வெற்றியாளர்களுக்கு சீட் வழங்க எம்ஐடியில் அனுமதி உண்டு. மும்பையில் தாதார் பார்சி யூத் அசம்ப்லி பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே, படிப்பில் கெட்டிக்காரியாக திகழ்ந்த மாளவிகாவை சூழ்நிலை காரணமாக அவரது தாய் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்.

நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் துயரத்தின் காரணமாக மாளவிகாவின் தாய் சுப்ரியா விருப்பமில்லாத இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி