ஆப்நகரம்

வைர வியாபாரிகளை ஏமாற்றி ரூ.27 கோடி மோசடி செய்த நபர் கைது!

வைர வியாபாரிகளை ஏமாற்றி ரூ 27 கோடி கொள்ளையடித்துவிட்டு, கும்பமேளாவில் சாது வேடமிட்டு வாழ்ந்துவந்த நபரை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 1 Feb 2019, 1:09 pm
வைர வியாபாரிகளைஏமாற்றி ரூ 27 கோடி கொள்ளையடித்துவிட்டு, கும்பமேளாவில் சாது வேடமிட்டு வாழ்ந்துவந்த நபரை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil 67782463


மும்பையை சேர்ந்த யட்டிஷ் ஃபிச்சடியா என்பவர் கடந்த 7 வருடங்களாகபல நகரங்களுக்கு பயணித்துவைர வியாபாரிகளை ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார். கடந்த 7 வருடங்களில் 25 வைர வியாபாரிகளை ஏமாற்றி ரூ.27 கோடி வரை கொள்ளையடித்துள்ளார்.

தன்னை வைர கற்களை விற்கும் புரோக்கர் என்று அறிமுகம் செய்யும் இவர், தரமான வைரத்தை வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ளார். கடந்த 3 மாதங்களாக காவல்துறையினர்இவரை தேடிவரும் நிலையில், தன்னை யாரும் கண்டறியாதபடி யட்டிஷ் அலகாபாத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் சாது வேடமிட்டு சுற்றிதிரிந்துள்ளார். மீண்டும் ஊர் திரும்பிய இவர்,தனது மனைவியிடம் தான் காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்க சொல்லியுள்ளார்.

இந்நிலையில் யட்டிஷ் ஃபிச்சடியா, கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி சுரேஷ் போர்டா என்பவரை சந்தித்து ரூ.1.2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பெயரில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ஷர்மா நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் பிடிபட்டுள்ளார்.

அடுத்த செய்தி