ஆப்நகரம்

மும்பை கனமழை: இரண்டு நாட்களில் 35 போ் பலி; 2 நாட்கள் மழை எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சுவா் இடிந்து விழுந்தும், விபத்துகளில் சிக்கியும் 35 போ் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Jul 2019, 9:23 am
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil Mumbai Rains


மகாராஷடிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக மும்பை, தாணே, புனே உள்ளிட்ட நகரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

கனமழை காரணமாக மும்பையின் புறநகா் பகுதியான மலாடியில் நேற்று அதிகாலை சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 22 போ் உயிாிழந்தனா். 50 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். புனேவின் அம்பேகான் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுவா் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிடத் தொழிலாளா்கள் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா்.


ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளும், தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடா் மழையால் மும்பைக்கு வரவேண்டிய 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 52 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளன.


இந்நிலையில் மும்பை உள்ளிட்ட மகராஷ்டிராவின் பல நகரங்களில் மேலும் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனா். கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக மாநில அரசு தொிவித்துள்ளது.

மும்பையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 375.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 1974ம் ஆண்டுக்கு பின்னா், 2005ம் ஆண்டு பதிவான வெள்ளத்திற்கு அடுத்தப்படியாக இந்த மழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி