ஆப்நகரம்

முத்தலாக் முறைக்கு முஸ்லீம் பெண்களே ஆதரவு!

முத்தலாக் முறையை தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் முஸ்லீம் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 31 Mar 2018, 10:37 pm
மகாராஷ்டிரா: முத்தலாக் முறையை தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் முஸ்லீம் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Samayam Tamil முத்தலாக் முறைக்கு முஸ்லீம் பெண்களே ஆதரவு!
முத்தலாக் முறைக்கு முஸ்லீம் பெண்களே ஆதரவு!


முன்று முறை தலாக் என்ற சொல்லைக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை முஸ்லீம்களிடையே வழக்கத்தில் உள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முத்தலாக் தொடர்பாக புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி, அதை மக்களவையிலும் நிறைவேற்றியது.

அதன்படி, பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. மேலும், முத்தலாக் முறையில் பெண்களை விவாகரத்து செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முத்தலாக் முறைக்கு தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து மும்பையில் உள்ள அசாத் மைதானத்தில் முஸ்லீம் பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர். முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு முஸ்லீம் பெண்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி