ஆப்நகரம்

கேரளாவில் இரவில் ஆறடி உயரத்தில் மக்களை மிரட்டும் உருவம்!!

கேரள மாநிலம் திருச்சூரில் இரவு நேரங்களில் ஆறடி உயரத்தில் மின்னல் வேகத்தில் சுற்றித் திரியும் உருவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 15 Apr 2020, 10:26 am
கொரோனா தொற்றை அடுத்து கேரளாவில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil கேரளாவில் மர்ம உருவம்


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள் செல்லாதவாறு அவர்களுக்குள் சாலையை மறித்து பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த மாநிலத்தில்தான் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிறந்த முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை கேரளாவில் கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாநிலத்தில் தான் இறப்பு விகிதம் குறைவு.

இந்த நிலையில், இந்த மாநிலத்தின் திருச்சூரில் இரவு நேரங்களில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் சென்று வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த உருவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''இரவு நேரத்தில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் செல்கிறது. மின்னல் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. காலில் சுருள் போன்று ஒன்று தெரிகிறது. இது பிளேக் மேன் அல்லது ஆவியாக இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு பேர் தான் தேச பக்தி- பாராட்டித் தள்ளும் சோனியா காந்தி!

இந்த உருவம் இரவில் வீட்டை தட்டுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை வீட்டுக் கதவை தட்டியதற்கு மற்றும் மனிதனை தாக்கியதற்கான சான்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வௌவால்களுக்கு கொரோனா வைரஸ்: மனிதனை தாக்குமா?

இரவு நேரத்தில் இந்த உருவத்தை பார்ப்பதற்கு என்று யாரும் லாக் டவுனை மீறி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு கண்டிப்பாக எச்சரித்துள்ளது. இரவு நேரங்களில் இதுபோன்ற உருவத்தை யாராவது பார்த்தால் தெரிவிக்கவும் என்று காவல்துறை உதவி எண்ணையும் கொடுத்துள்ளது. மேலும், அச்சம் இருக்கும் பகுதிகளில் காவல்துறையும் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளது.

மே 3 வரை ரயில்கள் ஓடாது!

இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தற்போதைக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி