ஆப்நகரம்

ரோஜாவின் திடீர் ஆம்புலன்ஸ் ரைடு..! சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ

நகரி தொகுதியில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்றதாக அத்தொகுதி எம்எல்ஏ ரோஜாவுக்கு எதிர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 9 Jul 2020, 11:13 pm
ஆந்திராவில் கொரோனா தாக்கத்தையடுத்து அம்மாநிலத்துக்கு மத்திய அரசு 8 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், உயிர்காக்கும் பல்வேறு வசதிகளுடன் கூடிய 414 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே 108,104 ஆகிய அவசர எண் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களும் உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களாக தரம் உயர்த்தப்பட்டன.
Samayam Tamil ysrcp mla roja


இந்தநிலையில் மொத்தம் 1068 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். இந்நிலையில், நகரி சட்ட மன்ற தொகுதியின் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தனது தொகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது புதிய ஆம்புலன்ஸ் ஒன்றின் டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்த அவர், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஒட்டி சென்றார்.

ரோஜாவின் இந்த நடவடிக்கைக்கு தற்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் அவர் எப்படி டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஆம்புலன்ஸை ஓட்டலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எந்த விசாரணைக்கும் தயார்: பினராயி விஜயன்

இந்த சர்ச்சை மட்டுமில்லாமல், ஆம்புலன்ஸ் வாங்குவதில் இருந்து மக்களுக்கு தரப்படும் நிவாரணம் வரை ஜெகன் மோகன் ரெட்டி அரசு பல்வேறு ஊழல்களை செய்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு தொடர் குற்றசாட்டுகளை எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி