ஆப்நகரம்

பிரதமர் மோடியை புஷ்கர விழாவிற்கு அழைக்க உள்ளார் சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் புஷ்கர புனித நீராடும் விழா ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுக்க உள்ளார்.

TNN 4 Aug 2016, 7:53 pm
விஜயவாடா: ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் புஷ்கர புனித நீராடும் விழா ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுக்க உள்ளார்.
Samayam Tamil naidu to call on modi tomorrow to invite him for pushkarams
பிரதமர் மோடியை புஷ்கர விழாவிற்கு அழைக்க உள்ளார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் கடந்த ஆண்டு மகா புஷ்கரம் விழா நடந்தது. இந்த விழாவின் போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சாபாக பல்வேறு ஆன்மீக சேவைகள் செய்யப்பட்டது. அதே போல் வரும் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கிருஷ்ணா நதியில் மகா புஷ்கரம் விழா நடக்க உள்ளது

இந்த விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை அழைக்க உள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு இந்த அழைப்பிதலோடு, ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்க உள்ளார்.

இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக இன்று நாயுடு டெல்லி புறப்பட்டு சென்றார்.

அடுத்த செய்தி