ஆப்நகரம்

கோத்ரா கலவரத்துக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை - நானாவதி கமிஷன் அறிக்கை

002-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த குஜராத் மதவன்முறைகள் தொடர்பாக விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கை இன்று அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது நானாவதி கமிஷன் அறிக்கை.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கலவர சம்பங்களுக்கும், குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நானாவதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil gothra tragedy


2002 ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்கள் பயணித்த சபர்மதி செல்லும் ரயிலின் பெட்டிகள் தீவைக்கப்பட்டன. எரிந்த பெட்டிகள், இதனையடுத்து அம்மாநிலத்தில் மிக மோசமான மதவன்முறைகள் நிகழ்ந்தன.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த மதவன்முறைக்கு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியும் அவரது அரசும்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் மோடிக்கு அமெரிக்கா போன்றநாடுகள் பயண தடை விதித்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்னமும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!

இந்நிலையில் 2002-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த குஜராத் மதவன்முறைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கை இன்று அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது நானாவதி கமிஷன் அறிக்கை.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில், 2002 வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இந்த வன்முறைகளுக்கும் அப்போதைய மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி