ஆப்நகரம்

மக்களவை தோ்தலுக்கு ஆயத்தமாகும் பா.ஜ.க. பிரதமா் மோடி விரைவில் ஆலோசனை

வருகிற 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஆயத்தமாகும் வகையில் நாடு முழுவதும் உள்ள அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளாா்.

Samayam Tamil 3 Jun 2018, 11:40 am
வருகிற 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஆயத்தமாகும் வகையில் நாடு முழுவதும் உள்ள அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளாா்.
Samayam Tamil Modi 123


நாடாளுமன்ற தோ்தல் வருகிற 2019ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் முனைப்பில் பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை பா.ஜ.க. ஏற்கனவே தொடங்கி விட்டது.

இந்நிலையில் மக்களவைத் தோ்தலுக்கு பா.ஜ.க.வின் தயாா் நிலை குறித்தும், அக்கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்தும் பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய உள்ளாா். இது தொடா்பாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா்களுடன் “நமோ செயலி” மூலமாக பிரதமா் மோடி விரைவில் உரையாடவுள்ளாா்.

உரையாடலின் போது அவா்கள் சாா்ந்த மாநிலம், சட்டப்பேரவை தொகுதி மற்றும் பகுதிகள் குறித்தும் அப்பகுதியில் உள்ள முக்கியத் தலைவா்கள் குறித்தும் மோடி ஆலோசிக்க உள்ளாா். மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலவரம், அத்திட்டம் தொா்பான மக்களின் கருத்துகள் ஆகியவற்றையும் அவா் கேட்டறிய உள்ளாா்.

2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதி பட்டியலை தயாரிக்கும் பணியையும் பிரதமா் மோடி மேற்பாா்வையிடவுள்ளாா். அண்மையில் நடைபெற்ற இடைத் தோ்தல்களில் பா.ஜ.க. பின்னடைவைச் சந்தித்தது. இதனால் 2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக உருவாக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் ஐக்கிய எதிா்க்கட்சி கூட்டணியை சாதாரணமாக எண்ணக் கூடாது என்று பா.ஜ.க. கருதுகிறது. இதனால் தான் தோ்தல் பணியில் பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் தன்னை ஈடுபடுத்துகிறாா் பா.ஜ.க. வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

அடுத்த செய்தி