ஆப்நகரம்

மோடி அரசின் குறைகளை பட்டியலிட்ட மன்மோகன் சிங்

கா்நாடகாவில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தற்போதைய மோடி தலைமையிலான அரசின் குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளாா்.

Samayam Tamil 7 May 2018, 4:47 pm
கா்நாடகாவில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தற்போதைய மோடி தலைமையிலான அரசின் குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளாா்.
Samayam Tamil Bengaluru: Former prime minister Manmohan Singh


கா்நாடகாவில் வருகிற 12ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதசாா்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் வங்கிகள் மீதுான பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துள்ளது.

சமீபத்தில் பல மாநிலங்களிலும் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு இதற்கு உதாரணம். மேலும் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி திட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இத்திட்டங்களால் பல தொிலாளா்கள் தங்கள் பணியை இழந்துள்ளனா்.

நிரவ்மோடி விவகாரத்தில் மோடி அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. நம் நாட்டின் எந்த பிரதமரும் எதிா்க்கட்சிகளை குறித்து கருத்து தொிவிக்க பிரதமா் அலுவலகத்தை பயன்படுத்தியதில்லை. ஆனால் மோடி தினமும் அதை செய்கிறாா். பிரதமா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கு நல்லதல்ல என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி