ஆப்நகரம்

திருப்பதி தேவஸ்தானம் செய்யப் போகும் பிரம்மாண்டம் - அதுவும் இலவசமாம்!

தேவஸ்தானம் கீழ் செயல்பட்டு வரும் BIRRD மருத்துவமனையின் அடுத்த அதிரடியான செயல்பாடு குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 14 Feb 2021, 10:08 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த தேவஸ்தானம் BIRRD எனப்படும் மருத்துவமனையையும் நடத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான மருத்துவ வசதிகளை மிகக் குறைந்த விலையிலும், இலவசமாகவும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று BIRRD மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
Samayam Tamil national level bone bank will be set up in tirupati birrd soon
திருப்பதி தேவஸ்தானம் செய்யப் போகும் பிரம்மாண்டம் - அதுவும் இலவசமாம்!


கோவிட்-19 நெருக்கடி

அதில் கலந்து கொண்டு பேசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மதன்மோகன் ரெட்டி, கோவிட்-19 பாதிப்பு காரணமாக மருத்துவமனையின் அனைத்து மேம்பாட்டு பணிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை முக்கியத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எலும்பு வங்கி கட்டமைக்க முடிவு

இதில் பெங்களூருவைச் சேர்ந்த ஆர்த்தோஸ்கோபி நிபுணர் டாக்டர் ஹேமந்த் குனார், சென்னையை சேர்ந்த டாக்டர் ராகேஷ், டாக்டர் பாலமுருகன், உடுப்பியை சேர்ந்த ஹேண்ட் மைக்ரோ வாஸ்குலார் நிபுணர் டாக்டர் பாஸ்கர் ஆனந்த் குமார் ஆகியோர் ஈடுபடுவர். புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எலும்பு வங்கியை கட்டமைக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் அனைத்து வகையான எலும்பு சிகிச்சையும் அளிக்கப்படும்.


ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; செம ட்விஸ்ட் கொடுத்த அமித் ஷா!

வெறும் 48 மணி நேரம் போதும்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் 6 முதல் ஓராண்டு வரை காத்திருக்கும் சூழல் இருக்கிறது. இதனைத் தவிர்க்கும் வண்ணம் எலும்பு வங்கியை கட்டமைக்கும் வேலையில் இறங்கியுள்ளோம். இதன்மூலம் 48 மணி நேரத்தில் எலும்பு தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் BIRRD மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது நாளொன்றுக்கு 20 முதல் 25 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.


என்னாது, மீரா மிதுன் தற்கொலையா?

நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள்

இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். அதேசமயம் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி 500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ப்ரீ அனஸ்தீசியா பரிசோதனைக்கு பிற மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் தற்போது நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை

இந்நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக செய்து தர தேவஸ்தான நிர்வாகத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே போலியோ, பக்கவாதம், மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ESI மற்றும் ஆரோக்யஸ்ரீ திட்டங்களின் மூலம் அனைத்து விதமான முறிவு சிகிச்சைகளும் அளிக்கப்படும்.


அனைத்து பயணிகள் ரயில் சேவையும் தொடக்கம்: இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ தகவல்!

மலிவு விலையில் மருந்துகள்

நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் புதிதாக மூன்று அறுவை சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக செயற்கை கைகள் தயாரிக்கும் யூனிட்டிற்காக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் வகையில் பொது மருந்தகம் ஒன்றை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி