ஆப்நகரம்

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் கோரிக்கை

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 8:54 pm
ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil MUMBAI:Odisha CM Naveen Patnaik during the launch of a book written on his fathe...
Odisha CM Naveen Patnaik during the launch of a book written on his father and leader Biju Patnaik 'The Tall man Biju Patnaik' in Mumbai on Saturday.Photo by Shashank Parade


ஒடிசா மாநில முதல்வர் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், ‘ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேசிய விளையாட்டாக உள்ளது. தற்போது வரும் நவம்பர் மாதம் ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.
அனைவரும் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால், அரசிதழில் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்கப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஹாக்கி விளையாட்டுக்காக இந்தியாவில் கோடானுகோடி மக்கள் உள்ளனர். எனவே, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று அரசிதழில் அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி