ஆப்நகரம்

”நவாஸ் ஷெரீப்புக்கு அரசாங்கம் நடத்த துப்பில்லை”:இம்ரான் கான் கடும் தாக்கு!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியாவிற்கு எதிரான பிரச்சனையை எப்படி கையாள்வது என தெரியவில்லை என தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 30 Sep 2016, 7:22 pm
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியாவிற்கு எதிரான பிரச்சனையை எப்படி கையாள்வது என தெரியவில்லை என தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil nawaz dont have ability to govern pakistan against the uri attack issue imran khan
”நவாஸ் ஷெரீப்புக்கு அரசாங்கம் நடத்த துப்பில்லை”:இம்ரான் கான் கடும் தாக்கு!


பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி தரவில்லை என அந்நாட்டு எதிர்க் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய கட்சியான தெரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரும்,முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்,பாகிஸ்தான் அரசை வழி நடத்த நவாஸ் ஷெரீப் லாயக்கற்றவர் என விமர்சித்துள்ளார்.

”இந்திய ராணுவம் எல்லை தாண்டி நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நான் அறிவுரை வழங்கப் போகிறேன்.அதே போல் இந்த தாக்குதலுக்கு நம் நாட்டின் பதில் என்ன என்பதை இந்திய பிரதமர் மோடிக்கு நாளை நான் செய்தி அனுப்ப போகிறேன்.”என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஒற்றுமையை உலகத்திற்கு தெரியும் வகையில் ஒரு பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ள அவர்,அந்த பேரணியில் பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு எப்படி அரசை வழிநடத்துவது என தெரியவில்லை.இப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ரஹீல் தான்.” என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

"Nawaz Sharif don't have ability to govern pakistan and now Army Chief General Raheel is representing the nation",said Imran Khan about the firing across the LoC

அடுத்த செய்தி