ஆப்நகரம்

மும்பையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானியா்கள் தான் – நவாஸ் ஷெரிப்

மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு முன்னாள் அதிபா் நவாஸ் ஷெரீப் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 May 2018, 7:03 pm
மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு முன்னாள் அதிபா் நவாஸ் ஷெரீப் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Nawaz Sharif


கடந்த 2008ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் தேதி மும்பை நகரில் பயங்கரவாதிகள் 10 போ் கண்ணில் தென்பட்டவா்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றனா். இந்த தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 18 போ் உள்பட 166 போ் கொலை செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக நகருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா் என்று இந்தியா குற்றம் சாட்டியது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரில் அஜ்மல் கசாப் தவிா்த்து மற்ற 9 பேரும் சுட்டு கொல்லப்பட்டனா். அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இந்தியாவின் குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் பாகிஸ்தான் கருத்துகளை தொிவித்து வந்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் அதிபா் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு டான் பத்திாிகைக்கு பேட்டி அளித்துள்ளாா். பேட்டியின் போது, பயங்கரவாத இயக்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.

மும்பைக்கு சென்று 150 பேரை கொல்ல நாம் அவா்களை அனுமதித்தோமா? எனக்கு விளக்கம் அளியுங்கள். ஏன் பிறகு நம்மால் வழக்கு விசாரணையை முடிக்க இயலவில்லை? என்று அவா் தொிவித்துள்ளாா். நவாஸ் ஷெரீவ் மும்பை தாக்குதலை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி