ஆப்நகரம்

இல்ல..இல்ல.. அஜித் பவார் பச்சைப் பொய் சொல்றாரு : கதறும் சரத் பவார்!!

பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் கூறியுள்ளது வடிகட்டிய பொய் என்று என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Nov 2019, 7:35 pm
மகாராஷ்டிர மாநில அரசியலில் , கடந்த ஒரு மாதமாக அரங்கேறிவரும் பல்வேறு அரசியல் திருப்பங்களின் உச்சமாக, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் சனிக்கிழமை (நவம்பர் 23) அதிரடியாக பொறுப்பேற்றனர்.
Samayam Tamil apsp


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அஜித் பவார் தலைமையில் வெளியேறிய அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு ஆதரவளிப்பதென முடிவெடுத்தனர்.

சரத்பவார் தான் எனது தலைவர்: அஜித் பவார் அதிரடி!

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாக, அக்கட்சித் தலைமை இன்று அறிவித்தது.

ஆனால், "தான் இப்போதும், எப்போதும் தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன் என்றும், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் முழுமையான ஆதரவு அளிக்கும்" என்றும் அஜித் பவார் கூறியிருந்தார்.

நட்சத்திர ஹோட்டலுக்கு விரைந்த உத்தவ் தாக்கரே... பவாருடன் 'டெரர்' சந்திப்பு!!

இந்த நிவையில், அஜித் பவார் சொல்வது பச்சை பொய் என்று சரத் பவார் கதறாத குறையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன், மகாராஷ்டிரத்தில் சிவசேனா ஆட்சி அமைவது உறுதி.

பாஜகவுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என அஜித் பவார் கூறி வருவது பச்சை பொய். பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பத்தையும், பொய்யான தகவலை பரப்பும் நோக்கதுடனும் அவர் இவ்வாறு கூறி வருகிறார் " என தமது பதிவில் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி