ஆப்நகரம்

எம்.பி.,க்களுக்கு சம்பளம் கட்; அமைச்சர் அறிவிப்பு

நாடாளுமன்றம் ஆரோக்கியமான முறையில் நடக்காகததால், 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று நாடாளுமன்மற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் கூறியுள்ளாளர்.

Samayam Tamil 5 Apr 2018, 9:30 am
நாடாளுமன்றம் ஆரோக்கியமான முறையில் நடக்காகததால், 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று நாடாளுமன்மற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் கூறியுள்ளாளர்.
Samayam Tamil parliament



கடந்த மாதம் 5ம் தேதி துவங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நாளையோடு முடிவடைகிறது. கடந்த 23 நாட்களாக நடந்த இந்த கூட்டத்தொடரில், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக எந்தவித விவாதமும் நடைபெறவில்லை.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவரி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் கூச்சலில் ஈடுபட்டனர். அமளியை காரணம் காட்டி மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காலையில் ஆரம்பிக்கப்படும் கூட்டத்தொடர், அடுத்த 2 மணி நேரத்துக்குள்ளாகவே அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும் நிகழ்வே அரங்கேறி வந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரோக்கியமான முறையில் நடக்காததால், 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று நாடாளுமன்மற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் கூறியுள்ளாளர்.




இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், 23 நாட்களாக நாடாளுமன்றத்தில் உருப்படியாக எதுவும் நடக்காதால், எங்கள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள்,. 23 நாட்களுக்கான சம்பளம், இன்னும் பிற சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்றும், அவர்கள் மக்களுக்கு ஒழுங்காக சேவை செய்தால் மட்டுமே அவர்கள் இந்த 23 நாள் சம்பளத்தை பெற்றுக்கொள்ளாம் என்றும் கூறியுள்ளார்.

வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் இல்லை என்னும் வரையறையை அமல்படுத்தும்படி பாஜக எம்.பி மனோஜ் திவாரி கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி