ஆப்நகரம்

கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பை பிரதமருக்கு பரிசாக தந்த இஸ்ரேல் அதிபர்!

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அதிபர் கடல் நீரை குடி நீராக மாற்றும் ஜீப்பை பரிசளித்துள்ளார்.

Samayam Tamil 17 Jan 2018, 11:01 am
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அதிபர் கடல் நீரை குடி நீராக மாற்றும் ஜீப்பை பரிசளித்துள்ளார்.
Samayam Tamil netanyahu gifts desalination jeep to narendra modi
கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பை பிரதமருக்கு பரிசாக தந்த இஸ்ரேல் அதிபர்!


சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இஸ்ரேல் முதல்வர் நெதன்யாகு மோடிக்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் வாகனத்தை (ஜீப்பை ) அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த ஜீப்பில் இரு நாட்டு முதல்வர்களும் கடலோரப் பகுதியில் பயணம் செய்தனர். அப்போது இந்த ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக தருவதாக கூறியிருந்தார்.

தற்போது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் , கடல் நீரை குடிநீராகா மாற்றும் ஜீப்பை மோடிக்கு பரிசாக கொடுக்க உள்ளார். 72 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ஜீப் நாளை டெல்லி வந்தடைய உள்ளது.

குஜராத் புஜ் பகுதியில் இந்த ஜீப்பை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக மாற்றும் வேலைகள் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை மோடி மற்றும் நெதன்யாகு நாளை காணொளி மூலம் தொடங்க வைக்கின்றனர். ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீரை இதன் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி