ஆப்நகரம்

அருணாசலப் பிரதேசம் என்ற ஒன்று கிடையாது; உள்ள புகுந்து வேலைய காட்டுவோம்; அடாவடி சீனா!

எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 4 Jan 2018, 6:57 am
பெய்ஜிங்: எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil never acknowledged arunachals existence says china amid intrusion report
அருணாசலப் பிரதேசம் என்ற ஒன்று கிடையாது; உள்ள புகுந்து வேலைய காட்டுவோம்; அடாவடி சீனா!


அருணாசலப் பிரதேசப் பகுதியில் அமைந்துள்ள இந்திய-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிக் கொண்டே இருக்கிறது.

சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிச் செல்வதும், அத்துமீறி சாலைகள் அமைப்பதும், இந்தியப் பகுதிகளை உரிமை கொண்டாடுவதும் என சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் அருணாசலப் பிரதேச எல்லைக்குள் 200கீ தூரம், சீன வீரர்கள் ஊடுருவியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங்கிடம் கேட்ட போது, இந்திய எல்லைப் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது.

அருணாசலப் பிரதேசம் என்ற ஒன்று இருப்பதை, சீனா ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது. இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

Never Acknowledged Arunachal's Existence says China Amid Intrusion Report.

அடுத்த செய்தி