ஆப்நகரம்

குஜராத்திலிருந்து வெளியேறும் மக்கள்!

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர்.

Samayam Tamil 7 Oct 2018, 4:46 pm
குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர்.
Samayam Tamil _8e02fbcc-ca10-11e8-b5ea-e5f20716953f


குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து குஜராத்தில் வேலை பார்த்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் வேலை பார்த்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பி வருகின்றனர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா கூறுகையில்,’14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால், வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிகரித்து வருகிறது. ஒருவர் தவறு செய்த காரணத்தினால், ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தவறானவர்கள் என்று எண்ணுவது தவறு. தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி