ஆப்நகரம்

முன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா

ஓம் பிர்லா சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணியை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Jun 2019, 6:01 pm
புதிதாக சபாநாயகராக பதவி ஏற்கவுள்ள ஓம் பிர்லா சுமித்ரா மஹாஜனை சந்தித்துள்ளார். அங்கு அவரிடம் ஆசிபெற்ற அவர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil D9Vnp8EVUAALEIs


ஒம் பிர்லா அவர்கள் எனக்கு நீண்டகால நண்பராக இருந்தவர். இந்த பாராளுமன்ற குழுவில் பொருளாளராக இருந்துள்ளார் ஓம் பிர்லா. அவர் சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணியை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.

ஜூயல் ஓரம் முன்னாள் மத்திய பழங்குடியின அமைச்சராக பதவி வகித்தவர். 58 வயதான ஜூயல் ஓரம் பாஜகவில் உள்ள பழங்குடியின தலைவர்களில் மிக முக்கியமானவர். பாஜகவின் வளர்ச்சிக்கு பழங்குடியின மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை உணர்ந்த வாஜ்பேய் தனது ஆட்சிக் காலத்தில் பழங்குடியினர் நலனுக்காக தனித்துறையை ஏற்படுத்தினார். எனவே பழங்குடியின தலைவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஜூயல் ஓரம் சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு தலைவர் ராதா மோகன்சிங்.

முன்னாள் வேளாண்துறை அமைச்சரான இவர், இந்த முறை பீகாரின் கிழக்கு சாம்ப்ரான் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே ராதா மோகன் சிங்கிற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதேபோல் முன்னாள் மத்திய இணையமைச்சரான பி.பி.சவுத்ரியின் பெயரும் முன்வைக்கப்பட்டது. முந்தைய அரசில் சட்டத்துறை இணையமைச்சராக இருந்த சவுத்ரி தற்போது ராஜஸ்தான் மாநிலம் பாலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவில் திறன்மிக்க மூத்ததலைவர்களில் இவரும் ஒருவர் என்பதால் சபாநாயகராக தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.

ஆனால் யாரும் எதிர்பார்க்கா வகையில் ராஜஸ்தானின் கட்டா தொகுதி எம்.பி., ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.

இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியாவிற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

துணை சபாநாயர் பதவியை பொறுத்தவரை கடந்த முறை போல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த முறை அதிமுகவிற்கு துணை சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்துள்ளதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியிடம் நல்ல செல்வாக்கு பெற்றுள்ள பிஜூ ஜனதாதளம், 22 எம்பிகளை கொண்டு 4-வது பெரிய கட்சியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம், பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ள சிவசேனா 18 எம்பிகளை பெற்றுள்ளதால் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வற்புறுத்தி வருகிறார்.

பாஜக தங்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.

புதிதாக சபாநாயகராக பதவி ஏற்கவுள்ள ஓம் பிர்லா சுமித்ரா மஹாஜனை சந்தித்துள்ளார். அங்கு அவரிடம் ஆசிபெற்ற அவர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒம் பிர்லா அவர்கள் எனக்கு நீண்டகால நண்பராக இருந்தவர். இந்த பாராளுமன்ற குழுவில் பொருளாளராக இருந்துள்ளார் ஓம் பிர்லா. அவர் சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணியை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன்.

அடுத்த செய்தி