ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை முகாமுக்கு 50 படுக்கைகள் அன்பளிப்பு: அசத்திய மணமக்கள்!!

மகாராஷ்டிராவில் புதிதாக திருமணமான தம்பதியர். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு 50 படுக்கைகளை அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

Samayam Tamil 24 Jun 2020, 8:13 pm
ஒட்டுமொத்த உலகமுமே இன்று கொரோனா வைரசின் கோரப்பிடிப்பில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகள், வேலையிழப்புகள் என்று பல எதிர்விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் சில நேர்மறையான மாற்றங்களும் நிகழத்தான் செய்கின்றன.
Samayam Tamil couple


இவற்றில் முக்கியமானது, பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடைபெற்று வந்த திருமண விழாக்கள், தற்போது அதிகபட்சம் 50 பேர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்று வருகின்றன. இதன் பயனாக, மிச்சமாகும் திருமண செலவுத் தொகையில் புதுமண தம்பதி பலருக்கு உதவி செய்து வருகின்றனர்.

இதற்கு உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் புதுமண தம்பதியர், அனைவரும் வியக்கும் விதத்தில் ஒரு செயலை செய்துள்ளனர். அந்த மாநிலத் தலைநகர் மும்பையில் எரிக்- மெர்லின் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.

“ஒருபோதும் கைவிடாதே”... டீ விற்றவரின் மகள் இப்போது ஐஏஎஃப் விமானி...

இருபதுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில், மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் அரங்கேறியது. திருமணம் முடித்த கையோடு இளம் தம்பதியர் நேராக, மும்பை மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு சென்றனர். அங்கு அவர்கள் 50 படுக்கைகளையும், செயற்கை சுவாச கருவிகளையும் அளித்தனர்.

திருமணம் முடித்த புதுமண தம்பதியர் உற்றார், உறவினர், நண்பர்களிடம் இருந்து பரிசுப் பொருள்களை அன்பளிப்பாக பெறுவதுதான் வழக்கம். ஆனால், மணமக்கள் கொரோனா சிகிச்சை மையத்துக்கு தங்களான பங்களிப்பை அளித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி