ஆப்நகரம்

பெரும்பான்மையை நிரூபிப்பாரா எடியூரப்பா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா கடந்த வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மாநில சட்டமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

Samayam Tamil 29 Jul 2019, 11:17 am
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
Samayam Tamil Yeddyurappa


கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ராஜினாமா கடிதம் வழங்கிய நிலையில், கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Also Read: மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி

இதனிடையே ராஜினாமா கடிதம் வழங்கிய 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 25ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில சட்டமன்ற தலைவர் ரமேஷ் குமார் மேலும் 14 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் குவிப்பு

இதுஒருபுறம் இருக்க, புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடியூரப்பா இந்த மாதம் 31ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் எடியூரப்பா இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

நியமன உறுப்பினர் உள்பட 225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தின் பலம் தற்பொது 208ஆக குறைந்துள்ளது. சபாநாயகர் நீங்கலாக சட்டமன்றத்தின் பலம் 207ஆக இருக்கும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது பாஜக வசம் 105 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நாங்கள் நிச்சயம் நிரூபித்துக் காட்டுவோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி