ஆப்நகரம்

#GlassHalfFull டம்ளர்களில் வீணாகும் 1.4 கோடி லிட்டர் தண்ணீர்!

பெங்களூரில் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 3:53 pm
பெங்களூரில் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil lrqkLscsIZEULYY-800x450-noPad


கர்நாடக மாநிலம் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகி வருகிறது. இந்நிலையில், உணவகங்களில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க Why Waste என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் முயல்கிறது.

உணவங்களில் தண்ணீர் குடிப்பவர்கள் பெரும்பாலும் டம்ளரில் சிறிதளவு தண்ணீரை மிச்சம் வைத்துவிடுகின்றனர். அந்தத் தண்ணீர் எப்போதும் வீணாகத்தான் செய்கிறது. இவ்வாறு ஆண்டுதோறும் 1.4 கோடி லிட்டர் தண்ணீர் ஆண்டுதோறும் வீணாகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இதற்காக உணவங்களுக்குச் சென்று இவ்வாறு வீணாகும் தண்ணீரைத் தவிர்க்க முயலுமாறு கேட்டபோது யாரும் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில், தேசிய உணவகங்கள் ஆணையத்திற்கு இதுகுறித்து விண்ணப்பம் ஒன்றை அளிக்க அந்த அமைப்பு முடிவுசெய்துள்ளது.

Why Waste? அமைப்பை 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பெங்களூரைச் சேர்ந்த கார்விதா குலஹாதி என்பவர் இதற்காக இணையதளத்தில் விண்ணப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், #GlassHalfFull என்ற ஹேஷ்டேக் ஒன்றைக் குறிப்பிட்டு, தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்க்க நம் டம்ளரில் பாதி அளவு மட்டும் நீரை நிரப்புவோம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த விண்ணப்பத்திற்கு 10,000 பேர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டால் அதனை தேசிய உணவகங்கள் ஆணையத்திற்கு அனுப்பப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி