ஆப்நகரம்

'தூய்மை பணியாளர்கள் இறந்தால் இவர்கள் தான் காரணம்' - தேசிய மனித உரிமை ஆணையம்!

தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Sep 2021, 5:34 pm

ஹைலைட்ஸ்:

  • தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Manual Scavenging
நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில், நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் போது, மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. என்ன தான் தொழில்நுட்பத்தில் நாடு வளர்ச்சி அடைந்தாலும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய சென்று, விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு.

இந்நிலையில், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் குமார் மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.
மின் கட்டணம் தள்ளுபடி: முதலமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு!
அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, சலுகைகளை வழங்க வேண்டும். மனிதக் கழிவுகளை அள்ளுதல் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான கையுறைகள், தலைக்கவம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தை மத்திய அமைச்சரவையின் அனைத்துத் துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்து உள்ளது.

அடுத்த செய்தி