ஆப்நகரம்

தீவிரவாத செயல்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம்: காஷ்மீரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை...!

தீவிரவாதத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக வழக்கில், ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

TNN 16 Aug 2017, 10:24 am
டெல்லி: தீவிரவாதத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக வழக்கில், ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil nia conducts searches at 12 locations in jk
தீவிரவாத செயல்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம்: காஷ்மீரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை...!


காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாக என்.ஐ.ஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து கடந்த மாதம் அல்டாப் அஹ்மத் ஷா, நயீம் கான், அக்பர் காந்தே, ராஜா மெஹ்ராஜூதின், ஃபரூக் தார், ஷாஹித் உல் இஸ்லாம், பீர் சயீஃப் உல்லா ஆகிய பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் மகன்கள் நயீம் மற்றும் நசீம் கிலானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கிலானி உட்பட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு, பாகிஸ்தான் ஹூரியத் தலைவர்களுடன் பொருளாதார ரீதியான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா, ஹந்த்வாரா, ஸ்ரீநகர் ஆகியவற்றின் 12 இடங்களில் என்.ஐ.ஏ தீவிர சோதனை மேற்கொண்டது. அடுத்ததாக பிரிவினைவாத தலைவர் கிலானியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Terror funding case: NIA conducts searches at 12 locations in J&K.

அடுத்த செய்தி