ஆப்நகரம்

வாரி வழங்கும் மத்திய அரசு - அயோத்தியில் ரூ.5,300 கோடியில் குவியும் வளர்ச்சித் திட்டங்கள்!

இந்துக்களின் புனித பூமியாக கருதப்படும் அயோத்தியில், பல ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

TIMESOFINDIA.COM 6 Feb 2019, 11:08 am
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அரை டஜன் நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், வரும் வெள்ளி அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.5,300 கோடி ஆகும். இதில் “84 கோசி பரிக்ராமா மார்க்” மற்றும் ”ராம் வன் காமன் மார்க்” ஆகியவற்றின் மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும். இந்த இரு திட்டங்களும் மதச்சார்புள்ளவை.
Samayam Tamil Ayodhya


குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வருகை தரும், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட உள்ளன. மேற்கூறிய அனைத்து திட்டங்களையும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளனர். இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த 2015ல் தீர்மானிக்கப்பட்டவை. பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன.

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, “84 கோசி பரிக்ராமா மார்க்(250 கிமீ)” திட்டத்தை முதல்கட்டமாக 91 கி.மீ வரை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ரூ.896 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பிறந்த அயோத்தி நகருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லக்கூடும். எனவே அவர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த செய்தி