ஆப்நகரம்

இந்த வருஷம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு அதிரடி!

நடப்பாண்டின் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Aug 2020, 1:49 pm
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பலர் பலியான சோக சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவிலும் இதே சூழல் தான். பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
Samayam Tamil Schools Reopen in India


இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் நாளுக்கு நாள் பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது.

சொத்தைப் பிரிக்கும் போது பெண்களுக்கும் சம பங்கு - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

இதில் பலரும் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம். நிலைமை கட்டுக்குள் வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் காரே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனெனில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்படும்.

கல்வி அமைச்சர் டூ 11ஆம் வகுப்பு மாணவன் - ரிவர்சில் திரும்பிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!

கல்லூரி இறுதித்தேர்வுகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே 2020ல் வெறும் 3 மாதங்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் செயல்பட்ட நிலையில் 9 மாதங்கள் மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி