ஆப்நகரம்

”பத்மநாப சாமி கோவிலில் சுடிதாருக்கு தடை”- கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு..!

புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சாமி திருக்கோவிலுக்குள் பெண்கள் சுடிதார் அணிந்து கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

TNN 8 Dec 2016, 3:39 pm
புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சாமி திருக்கோவிலுக்குள் பெண்கள் சுடிதார் அணிந்து கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil no churidar at padmanabhaswamy temple hc
”பத்மநாப சாமி கோவிலில் சுடிதாருக்கு தடை”- கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி,திருவனந்தபுரம் பத்னாபசாமி கோவிலின் அரசுத்தரப்பு நிர்வாகியான சதீஷ் என்பவர் பெண் பக்தர்கள் பத்மநாப சாமி கோவிலுக்குள் சுடுதார் அணிந்து சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்தார்.கோவில் நிர்வாகியான ஹரிபாலை கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கையை அவர் எடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சதீஷின் இந்த முடிவை எதிர்த்து இரண்டு பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம்,இன்று தீர்ப்பளித்தது.”பத்மநாப சாமி கோவிலுக்குள் பெண்கள் சுடிதார் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது.சதீஷ் கோவிலின் ஒரு பணியாளர்தானே தவிர,கோவிலின் ஆகம விதிகளை மீறும் வகையில் அவரால் உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரமில்லை.”என தனது தீர்ப்பில் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No churidar at Padmanabhaswamy Temple: HC

அடுத்த செய்தி