ஆப்நகரம்

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு நடப்பாண்டு அனுமதி இல்லை என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Jun 2020, 5:05 pm
இஸ்லாமியர்களின் முக்கிய கடைமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியாவின் மெக்கா, மதினா நகருக்கு புனித பயணம் மேற்கொண்டு தொழுகை நடத்துவார்கள்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும் உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த நிலையில், ஹஜ் புனித யத்திரை குறித்து சவுதி அரேபிய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ரத்து செய்யப்படவில்லை. அதேசமயம், வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், ஹஜ் புனித யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள், சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழுகைக்கு வரும் மக்கள் அனைவரும் சரீர விலகலைக் கடைபிடித்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலைக்கு இதுதான் காரணம்... உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு நடப்பாண்டு அனுமதி இல்லை என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்துள்ளார். மேலும், ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பக் கட்டணம் பிடித்தம் எதுவும் செய்யப்படாமல் அப்படியே திரும்ப கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி