ஆப்நகரம்

ஹெல்மெட் இல்லையெனில் பெட்ரோல் இல்லை

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தலைக்கவசம் இல்லயெனில் எரிபொருள் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுதியுள்ளது.

TNN 9 Jul 2016, 6:12 pm
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தலைக்கவசம் இல்லயெனில் எரிபொருள் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுதியுள்ளது.
Samayam Tamil no helmet no petrol formula implemented in kolkata
ஹெல்மெட் இல்லையெனில் பெட்ரோல் இல்லை


"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை பாதுகாப்பு திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, சாலை பாதுகாப்பு குறித்த தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும், சாலை விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் தலைக்கவசம் இல்லயெனில் எரிபொருள் கிடையாது என்ற புதிய விதியை கொல்கத்தா போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, கொல்கத்தாவில் தலைக்கவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கேரள மாநிலத்தின் மூன்று நகரங்களில் முதல்கட்டமாக இதே போன்றதொரு விதி அமல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், ஒடிசா மாநிலத்திலும் தலைக்கவசம் இல்லயெனில் எரிபொருள் கிடையாது என்ற புதிய விதியை பின்பற்றுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது கொல்கத்தா நகரமும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி