ஆப்நகரம்

பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை: விகாஸ் ஸ்வரூப்

பிரான்ஸில் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

TNN 15 Jul 2016, 3:52 pm
டெல்லி: பிரான்ஸில் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no indian affected in nice attack mea
பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை: விகாஸ் ஸ்வரூப்


#NiceAttack Our Ambassador in Paris is in touch with the Indian community in Nice. So far no report of any Indians affected— Vikas Swarup (@MEAIndia) July 15, 2016

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர், பிரான்ஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தீவிரவாதத் தாக்குதலில் இதுவரை எந்த இந்தியரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#NiceAttack Our Embassy in Paris has opened helpline +33-1-40507070.— Vikas Swarup (@MEAIndia) July 15, 2016

மேலும் பிரான்ஸில் உள்ள இந்தியர்களின் அவசரத்தொடர்புக்காக +33-1-40507070 என்ற தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி