ஆப்நகரம்

மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் அசைக்க முடியாது: குமாரசாமி அதிரடி

மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாகவும், மக்களவை தேர்தல் வரும் வரை கர்நாடாகவிற்கு நான் தான் முதல்வர் என குமாராசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2018, 12:07 am
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாகவும், மக்களவை தேர்தல் வரும் வரை கர்நாடாகவிற்கு நான் தான் முதல்வர் என குமாராசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kumarasamy-says-congress-and-jds-parties-are-in-good-terms
”என்னை யாரும் அசைக்க முடியாது” ஹெ.டி. குமாரசாமி


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த கூட்டணி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் அதிருப்தியில் இருப்பதால் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி பேசியதாவது:-

மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஸ்திரத்தன்மையுடன் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு வருடத்திற்கு என்னை யாராலும் அசைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். குறைந்தபட்சம் ஒரு வருடம், அதாவது மக்களவைத் தேர்தல் முடியும் வரையில் இந்த பதவியில் இருப்பேன்.

அதுவரையில் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என்னுடைய பதவிக்காலத்தில் மாநில நலன்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவேன். இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க மாட்டேன்.

அனைத்து கோணங்களிலும் மாநில முன்னேற்றம் முக்கியம் என்பதால், நேரத்தை வீணடிக்க மாட்டேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி