ஆப்நகரம்

பாஜகவில் இணைகிறாரா, இல்லையா - என்ன சொல்கிறார் சச்சின் பைலட்?

கடந்த சில நாட்களாக தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும் சச்சின் பைலட் பாஜகவில் சேருவது தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 15 Jul 2020, 11:57 am
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் ஓட்டலில் தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் தன்வசம் 30 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அசோக் கெலாட்டின் மைனாரிட்டி அரசு என்று கூறி சச்சின் பரபரப்பை கிளப்பினார். மேலும் சச்சின் பைலட் பாஜகவில் சேரப் போவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு தான் மெஜாரிட்டி இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைமை கூறியது.
Samayam Tamil Sachin Pilot


தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். மேலும் குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் பைலட் பதவி நீக்கம்... படுபிசியான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!!

இதன் தொடர்ச்சியாக நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுண்ட் ஓட்டலில் நடந்த கூட்டத்தில், சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று 102 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர், துணை முதலமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

ராஜஸ்தான் போலீஸார் கார் சாவியை பறித்தனர்... எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!!

இந்நிலையில் சச்சின் பைலட்டை வரவேற்க தயாராக இருப்பதாக ராஜஸ்தான் மாநில பாஜக தெரிவித்துள்ளது. இதுபற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் பேட்டியளித்த சச்சின் பைலட், பாஜகவில் சேரப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி