ஆப்நகரம்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: விடைபெறும் போது கொளுத்தி போட்ட ஹமீத் அன்சாரி...!

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 10 Aug 2017, 9:35 am
டெல்லி: இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil no safety for muslims says vp hamid ansari
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: விடைபெறும் போது கொளுத்தி போட்ட ஹமீத் அன்சாரி...!


நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு நாளை பதவியேற்கிறார்.

இதற்கிடையில் மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு ஹமீத் அன்சாரி பேட்டியளித்தார். அப்போது அவர், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறினார்.

அதற்கு பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள், மாட்டிறைச்சி தடை, தாய் மதம் திரும்புதல் உள்ளிட்டவையே காரணம் ஆகும். இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்டார்.

நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அதன் அடிப்படைக்கே பாதிப்பு வருவது மிகவும் வேதனை அளிப்பதாக கூறினார். ஓய்வு பெறும் நிலையில் ஹமீத் அன்சாரி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

No safety for Muslims says VP Hamid Ansari.

அடுத்த செய்தி